Our Feeds


Wednesday, July 6, 2022

ShortNews

சமையல் கேஸ் - இனி தட்டுப்பாடு இல்லையாம் - பிரதமர் ரனில் அறிவிப்பு



கொழும்பில் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 9ஆம் திகதியன்று எரிவாயு கப்பல் வரவுள்ளதாகவும், இதனையடுத்து 11ஆம் திகதி முதல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தலா 100 கொள்கலன்கள் வீதம் 140 இடங்களில் 12.5 கிலோ எடையுள்ள ஒரு இலட்சத்து 40,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து நாளாந்தம் மொத்தமாக 25,000 கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »