பிரதமரின் இன்றைய உரையில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு சொல்லப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். அது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிந்ததே, எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தீர்வு வழங்கினாரா? இன்று திரிபோஷா இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கு போசாக்கு இல்லை, பிறக்கும் குழந்தைகளுக்கு போசாக்கு இல்லை. இதற்கு பிரதமர் தீர்வு வழங்கினாரா? என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
இதைவிட நல்ல திட்டங்கள் இருந்தால் சொல்லுமாறு பிரதமர் தனது உரையில் தெரிவித்தார். நான் சொல்கிறேன், முதலில் ஊழல் மோசடியை நிறுத்துங்கள். மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள். கட்டார் பயங்கரவாதிகளுக்கு துணை நிற்கிறது என்று அப்போது கூறினீர்கள். இப்போது அந்த நாடுகளுக்கு எரிபொருள் கோரி செல்கின்றீர்கள். இதுவொரு வெட்கக்கேடான விடயமாகும்.- என்றார்.