Our Feeds


Wednesday, July 6, 2022

SHAHNI RAMEES

புதிய கொரோனா வைரஸ் திரிபு மீண்டும் பரவும் அபாயம்.

 

புதிய கொரோனா வைரஸ் திரிபு மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் உரிய வகையில் செலுத்திக்கொள்வதே, அதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் செலுத்திக்கொள்ள முடியும்.

கொரோனா 4ஆம் தடுப்பூசியினை செலுத்திக்கொள்வதன் ஊடாக வைரஸ் தொற்றின் பாதிப்பினை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், மரணம் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபட முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »