ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியான நிலையில் இருந்து இந்த நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது ராஜபக்ஷ குடும்பத்தினரே, எனவே பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை அவர்கள் இழந்துள்ளதால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லையென அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேராயர், பதவியில் உள்ள ராஜபக்ஷர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் இனியும் பதவியில் நீடிக்க அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும், மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் ஆட்சி அதிகாரத்தை அவர்கள் ஒப்படைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
