ஹட்டனில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில், மர்ம பொதியொன்று இருப்பதாகவும். அதனையடுத்து பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹட்டன் நகரத்துக்கு வரும் பஸ்களை நகரத்துக்குள் செல்லவிடாது பொலிஸார் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். இதேவேளை, பயணி ஒருவர் விட்டுச் சென்ற பொதி ஒன்றென பொலிஸார் கண்டறிந்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளுக்காக அந்த பொதியை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து ஹட்டன் நகரம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
