Our Feeds


Sunday, July 17, 2022

ShortNews

BREAKING: லங்கா IOC நிறுவனமும் பெட்ரோல் & டீசல் விலைகளை குறைத்தது - விலைப் பட்டியல் இணைப்பு



லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இன்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.


அதனடிப்படையில் 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 450 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 540 ரூபாவாகும்.

இதேவேளை ஒட்டோ டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 440 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 510 ரூபாவாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »