Our Feeds


Wednesday, July 20, 2022

ShortNews

BREAKING: ஜனாதிபதி தேர்தலில் ரனில் விக்கிரமசிங்க அபார வெற்றி




நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்க புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்றை வாக்களிப்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளும், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளும், அனுர குமார திசாநாயக்கவுக்கு 3 வாக்குகளும் கிடைத்திருந்தன.

மேலும், 2 பேர் வாக்களிக்கவில்லை என்பதோடு, 4 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

அதற்கமைய, புதிய ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »