Our Feeds


Wednesday, July 20, 2022

ShortNews Admin

JUST_IN: புதிய பிரதமராகிறார் தினேஷ் குணவர்த்தன ?



புதிய பிரதமராக சபை முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கோட்டாபய ராஜபக்ஷ பதவி நீங்கியமையை அடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க – பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற போதும், பிரதமராக எவரும் நியமிக்கப்படவில்லை.


பிரதமர் பதவியையும் ரணில் விக்ரமசிங்கவே தன்வசம் வைத்திருந்தார்.


இந்த நிலையில், இன்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


இதனையடுத்து, புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக பிரேரித்தவர் தினேஷ் குணவர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »