Our Feeds


Tuesday, August 16, 2022

SHAHNI RAMEES

அவசரகாலச் சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் – ஜனாதிபதி நம்பிக்கை


 தற்போதைய அவசரகாலச் சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் இன்று (16) நடைபெற்ற “கல்விசார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022” விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை எனவும் சுட்டிக்காட்டினார். புலம்பெயர் மக்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையில் புலம்பெயர் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் துலித பெரேரா, பொதுச் செயலாளர் உபாலி ஜயவர்தன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »