தம்மை இலங்கையிலிருந்து வெளியேறும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கெலிக் பிரேசர் என்ற பிரித்தானிய யுவதி சமர்ப்பித்த மனுவை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபிதா ராஜகருணா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காலி முகத்திடலில் தாம் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விசாவை இரத்துச் செய்வதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை குறித்த யுவதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
