Our Feeds


Wednesday, August 17, 2022

SHAHNI RAMEES

நாட்டில் புலம்பெயர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு தீர்மானம்! - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

 

நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதில் புலம்பெயர் மக்களும் ஒரு பலமாகக் காணப்படுகின்றனர்.

எனவே அவர்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்கும் , அவர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணுவதற்கும் இலங்கையில் புலம்பெயர்  அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.



கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில்  செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022’ விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நாம் கடுமையாக செயற்பட்டால் இது குறுகிய கால நெருக்கடியாகவே காணப்படும். எனினும் மேலும் மேலும் வாத விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் அனைவரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். நாம் மீண்டும் பழைய அரசியலையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளோமா என்பதே தற்போதுள்ள சிக்கலாகும்.

நாம் முதலில் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கு நானும் , நீங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்பதை நான் அறிவேன்.

அதனைத் தொடர்ந்து  நாடாளுமன்றத்தை அரசாங்கத்தை போன்றாக்குவதற்கு முயற்சிப்போம். நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்பு குழுக்கள், தேசிய சபை, கண்காணிப்பு குழுக்கள் என்பவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட மாட்டார்கள். குறித்த குழுக்களின் உறுப்பினர்களுக்கு 5 இளம் அங்கத்தவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »