Our Feeds


Thursday, August 18, 2022

ShortTalk

வறுமையில் தள்ளியுள்ள நெருக்கடி! அவசர நடவடிக்கையை கோரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்!



இலங்கையின் பொருளாதார நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளியுள்ளது.


அத்துடன் சுகாதாரம், கல்வி மற்றும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கான அவர்களின் உரிமைகளை பாதிக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதிய சமூகப் பாதுகாப்பு முறையை நிறுவுவதற்கும் கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கும் நியாயமான வரி விதிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் ஊழலை ஒழிப்பதற்கும், இலங்கை அரசாங்கம் தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இலங்கையர்கள், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பிற இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் ஆனாலும் புதிய அரசாங்கம் அமைதியான எதிர்ப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்துகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை விடுத்து இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் கொழும்பில் சிலரை நேர்காணல் செய்தது.

அவர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்கத்துடன் மற்றும் சில சமயங்களில் பெற முடியாத சில தேவைகளுடன்இ குறைந்து வரும் வருமானம் காரணமாகப் போராடிக் கொண்டிருப்பதாக கூறினர்.

சிலர், தாங்கள் இரண்டு வேளை உணவை மட்டும் குறைத்துவிட்டதாகவும் மின்சாரக் கட்டணம் வாடகை போன்ற அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்குவதாகவும் தெரிவித்தனர்.

மாதம் 45000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு காவல்துறை அதிகாரி தனது குடும்பம் கடனில் மூழ்கி இருப்பதாக கூறினார்.

6 மாத குழந்தையுடன் தெரு துப்புரவு பணியாளர் ஒருவர் ஆட்சி மாற்றம் மற்றும் ஊழலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டதாக கூறினார்.

குழந்தை பிறந்தபோது ஒரு சவர்க்காரம் 80 ரூபாய்!. இப்போது அது 210 ஆக உயர்ந்துள்ளதாக அந்த பணியாளர் குறிப்பிட்டதாக கண்காணி;ப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பின்வரும் அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இதேவேளை இலங்கையின் முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டமான சமுர்த்தி என்பது மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரொக்கப் பணம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இருப்பினும் இது பயனற்றது மற்றும் ஊழல் நிறைந்ததாக உள்ளது என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »