Our Feeds


Thursday, August 18, 2022

ShortTalk

நெருக்கடியின்போது இலங்கைக்கு இந்தியா மட்டுமே உதவியது! - நினைவூட்டும் இந்திய அமைச்சர்!



இந்தியப் பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த பல நாடுகள் தீவிரமாக முயன்று வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்ட சீனாவின் போலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் யுவான்வாங் 5 பற்றிய கேள்வி ஒன்றுக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தியப் பெருங்கடல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மற்றொரு முக்கிய புள்ளியாக மாறாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க வேண்டும். எனினும் பிராந்தியத்தில் ஏகபோக உரிமை கோர முடியாது என்று வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக வசதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தடைபட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கு இலங்கைக்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியா மட்டுமே என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »