Our Feeds


Tuesday, August 9, 2022

ShortTalk

த.தே.கூ வை போல், முஸ்லிம் தலைமைகளும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - அமைச்சர் ஹாபிஸ் நஸீர் பாராளுமன்றில் கோரிக்கை



சர்வகட்சி அரசாங்கத்தில் பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமல்லாது, இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் சந்தர்ப்பம் உள்ளதால், முஸ்லிம் தலைமைகளும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.



ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையின் முதலாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


பாராளுத்தில் இன்று (09) உரையாற்றிய அவர்;


மக்களின் பிரச்சினைக்கு முக்கியமளிக்கும் நோக்குடன்தான், சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. நீண்ட கால அரசியல் அனுபவமுள்ள ரணில்விக்ரமசிங்க 134 எம்பிக்களின் ஆதரவுடன் அவர் ஜனாதிபதியாகத் தெரிவானார்.அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியிலிருந்து மாத்திரம்தான் புதிய ஜனாதிபதிக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. ஏனைய கட்சிகளிலிருந்து பரவலாக  ஆதரவுகள் கிடைத்துள்ளன.முஸ்லிம் தலைமைகளுக்கும் இது தெரியும். எனவே வெளியிலிருந்து விமர்சிப்பது, திரைமறைவில் சொகுசுகள் மற்றும் பதவிகள் பற்றி பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.


வெளிப்படையாக வந்து பொதுவெளியில் பேசுவதுதான், பொறுப்புள்ள செயற்பாடாக அமையும். நெருக்கடிகள் அதிகரித்த காலகட்டத்தில்,ரணிலிடம் பதவிகளை ஒப்படைப்படைக்க தீர்மானித்தமை குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பியியான சாணக்கியனிடம் தெரிவித்திருக்கிறார். சுமந்திரன் எம்பியின் உரையிலிருந்து இதை, தெரிந்துகொள்ள முடிந்தது.


இவ்வாறான உறவுகளைப் பேணி,தங்கள் சமூகத்துக்கு எதையாவது செய்யும் வியூகத்தை முஸ்லிம் தலைமைகளும் முன்மாதிரியாகக் கொள்வது அவசியம். முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, மாவட்ட ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள்  உட்பட இனப்பிரச்சினை இன்னும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு,சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முஸ்லிம் தலைமைகள் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »