முறையான பயணமாக இலங்கை வந்துள்ள
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (பிஎன்எஸ்) தைமூருடன் இணைந்து இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளை நடத்தவுள்ளனர் என்ற செய்தியை இலங்கையின் கடற்படை மறுத்துள்ளது.கடந்த 12 ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்த இந்த கப்பல் நாளை (15) இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.
இந்தநிலையில் கொழும்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இந்த கப்பலுடன், இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
