Our Feeds


Tuesday, August 23, 2022

SHAHNI RAMEES

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை

மறுசீரமைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கிணங்க, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடாவிட்டாலோ அல்லது வேறு தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டாலோ, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் வருமானம் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »