Our Feeds


Thursday, August 27, 2026

SHAHNI RAMEES

ரவூப் ஸெய்னிடம் விளக்கம் கோருகிறது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்!

 


கலாநிதி ரவூப் ஸெய்னிடம் விளக்கம் கோருகிறது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு, சில தினங்களுக்கு முன்னர் கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்னினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பில் விளக்கம் கோரி, அமைப்பின் சார்பில் அவருக்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




அவரால் பொதுப்படையாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக, அமைப்பின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பல உறுப்பினர்களும் போரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதன் அடிப்படையில், அவரிடம் விளக்கம் கோருவதென தீர்மானிக்கப்பட்டு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »