கொழும்பு புறக்கோட்டை (Fort) பேருந்து நிலையத்தில்
பயணியொருவரின் பையைத் திருடிய சந்தேகநபரை, புதிய கட்டுப்பாட்டு அறையின் CCTV கண்காணிப்பு அமைப்பின் மூலம் அடையாளம் கண்டு, இலங்கை விமானப்படை வீரர்கள் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.நேற்று (23) இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் CCTV கேமரா தொகுதி மூலம் கண்காணிக்கப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் உடனடியாகச் செயற்பட்டு சந்தேகநபரை அடையாளம் கண்டு இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
