2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான சாஜித், சிறைச்சாலையில் இருந்தவாறே இலங்கை சட்டக் கல்லூரிப் பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றி தேர்ச்சியடைந்துள்ளார்.சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் மற்றும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே இவர் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவிக்கப்பட்டார். பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அவர் சட்டக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இவர் மீதான வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில், சிறைச்சாலையில் இருந்தவாறே உயர் கல்வியைத் தொடர்வதற்கு இவருக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து பலதரப்பட்ட கருத்துக்களும் விவாதங்களும் எழுந்துள்ளன."
