Our Feeds


Monday, August 22, 2022

ShortTalk

நாவலபிட்டிய வெள்ளம் - வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி வழங்குவது பற்றிய முக்கிய கலந்துரையாடல்.



நாவலப்பிட்டியவில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் சேதத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர அவதானத்திற்குரிய ஆபத்தான பிரதேசங்களாக அரசாங்கத்தினால் இனங்ககாணப்பட்ட  பகுதிகளில் இருந்து குடியிருப்புகளை அகற்றுவதற்கான தேவை இருப்பதால் அகற்றப்படும் குடியிருப்புகளை மீள்குடியேற்றம் செய்வதற்கான மாற்றுக் கானிகளை அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொறிமுறைகள் சம்பந்தமாக ஆகஸ்ட் 16 செவ்வாய் அன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே முன்னிலையில்  தீர ஆராயப்பட்டது.


மேற்கொண்டு ஒதுக்கப்படும் காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் செயல் திட்டம், மற்றும் அந்தக் காணிகளில் புதிதாக வீடுகளை நிர்மாணிக்கும் வீட்டுப் பணித்திட்டம் ஆகியன சம்மந்தமாகவும் விரிவான ஒரு கலந்துரையாடலும் முன்னாள் அமைச்சரின் கொழும்பு இல்லத்தில் அதே சமயம் முன்னெடுக்கப்பட்டது.


இந்த கலந்துரையாடல் அகில இலங்கை YMMA பேரவையினால் கௌரவ ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆகஸ்ட் 12ம் திகதி எழுதிய கடிதத்தை முதன்மைப்படுத்தி யட்டினுவர பிரதேச சபை உறுப்பினர் கௌரவ வசீர் முக்தார் அவர்களின் ஒருங்கினைப்பினால் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தாருடன் அகில இலங்கை YMMA பேரவை தலைவர் அல்ஹாஜ் Saheed M Rismy  அவர்களும், முன்னாள் ACYMMAC தலைவரும் இலங்கைக்கான PAFFREL அமைப்பின் உப தலைவருமான கௌரவ சட்டத்தரணி டீன் அவர்களும், அகில இலங்கை YMMA பேரவையின் கண்டி மாவட்ட பணிப்பாளர் சகோதரர் இஹ்திஷாம் மற்றும் JJ Foundation தலைவர் அல்ஹாஜ் ஹனீப் அவர்களும் கலந்து கொண்டனர்.


பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுற்றதை அடுத்து காணி வழங்கும் நிகழ்வு துரிதப்படுத்தப்படுவதோடு வீடு கட்டும் வேலை திட்டத்ததுக்கான முதல் ஒதுக்கீடு சம்பந்தமாக கௌரவ ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக அமைச்சரினால் உறுதி அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக 15 திங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் அவரது நாவலப்பிட்டிய காரியத்தில் ஒரு தெளிவூட்டல் நிகழ்வு நடாத்தி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது 


மேலும் இந்த வீட்டு திட்டத்திற்கு அகில இலங்கை YMMA தலைமையில் பல சிவில் அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் ஒன்றிணைத்து நிதி பற்றாக்குறைக்காக நிதி சேகரிக்கும் திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவும் உத்தேசிக்கப்பட்டது.


இந்தத் திட்டத்திற்கு சமூக பற்றுடன் பூரண உதவிகளை வழங்கவும் பொறுப்புகளை ஏற்று செயல் நடத்தவும் அகில இலங்கை YMMA பேரவை கௌரவ முன்னாள் அமைச்சர் உடன் உடன்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »