Our Feeds


Friday, August 5, 2022

SHAHNI RAMEES

கர்ப்பிணி - பாலூட்டும் தாய்மாருக்கு திரிபோஷா தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை.

 

கர்ப்பிணித் தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் திரிபோஷா மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை

தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.


தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டலானது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக மேற்கொள்ளப்படும் பாரிய நிவாரணமாகும் என அந்த பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.



தாய்ப்பாலூட்டுவதற்கான வசதிகளை கணவன் வழங்க வேண்டும்.



அத்துடன், தாய்ப்பாலூட்டல் தொடர்பில், மாமனாரும், மாமியாரும், குடும்பநல உத்தியோகத்தர், வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோரின் பொறுப்புகள் தொடர்பில், தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.



குழந்தைகளுக்கு, 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுவரை, தாய்ப்பாலூட்டுவதே தற்போதைய காலகட்டத்திற்கு அவசியமானதாகும் என குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »