திருகோணமலை பச்சனூர் பகுதியில்
இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ம் கட்டை- பச்சனூர் பகுதியிலுள்ள விகாரைக்கு சேறுவில பிரதேசத்திலிருந்து சிரமதான பணிக்காக உழவு இயந்திரத்தில் சென்றபோது உழவு இயந்திரத்தின் கொக்கை கழன்று விழுந்ததாகவும் இதன் போது மூவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் முதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



