Our Feeds


Monday, August 8, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்.

 

நாட்டில் கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள்

போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அந்த வகையில், ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தின் போது மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட 32 பேரின் இருப்பிடத்தை தற்போது வரை கண்டறிய முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு வெளியான படங்களில் பெரும்பாலானவை ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ கத்திரையில் அமர்ந்திருக்கும் சந்தேக நபர்களை தேடியே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்மூலம், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் குறித்த தகவல் அறியும் பொதுமக்கள் 071-8591559 / 071-8085585 / 011-2391358/ 1997 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »