Our Feeds


Tuesday, August 23, 2022

ShortNews Admin

இன்றும் மூன்று மணிநேர மின்வெட்டு - எங்கு? எந்நேரத்தில்? - பட்டியல் இணைப்பு



நாட்டில் இன்றும் மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் w வரையான வலயங்களிலும், காலை வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இதுதவிர, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »