Our Feeds


Monday, August 22, 2022

ShortTalk

BREAKING NEWS :- வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு - ஜனாதிபதி வழங்கிய அதிரடி உத்தரவு



அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்கர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த 18ம் திகதி அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை தவிர்ந்த ஏனைய 15 பேர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒருவர் மாத்திரம் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த முதலில் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமைய 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


நன்றி: ட்ரூ சிலோன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »