Our Feeds


Sunday, August 21, 2022

ShortTalk

JUST_IN: போராட்டக்காரர்கள் மீதான இலங்கை அரசின் வன்முறைகளை தடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம்



போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்காமல் இருப்பதற்கும், பிரஜைகளின் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை இலங்கை அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்துமாறு அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்கள், அந்நாட்டின் இராஜாங்க செயலாளரிடம் கோரியுள்ளனர்.


இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை, ஊரடங்கு சட்டம் மற்றும் போராட்டங்களை அடக்குவதற்கு தோட்டாக்களை பயன்படுத்துதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உடனடி உதவிகளை வழங்குமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் (Antony Blinken), சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் ஆகியோரிடம் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடிதம் ஊடாக அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »