வீட்டு தோட்டத்திலுள்ள தென்னை மரத்திலிருந்து தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்ததால் மகன் சம்பவ இடத்திலேயே பலியான பெருந்துயர் சம்பவமொன்று பதுளை, நமுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நமுனுகுல, மியனகந்துர மகா வித்தியாலயத்தில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் எச்.எம்.சமீர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் இவரே ஒரே பிள்ளை.
கடந்த 29 ஆம் திகதி மாலையே தந்தை தேங்காய் பறித்துள்ளார். வெளியே சென்றிருந்த மகன், மறுபடியும் வீடு வந்தபோதே அவரின் தலையில் தேங்காய் விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த மகன், பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஆகஸ்ட் 31) காலை உயிரிழந்துள்ளார்.
