கேகாலை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை – களுகல மாவத்தை பகுதியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (செப் – 01) முற்பகல் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் கேகாலை – ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண், களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் ஊழியர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.