அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக்
கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கரும் ருவன்வெலி சைத்தியாராமாதிகாரியுமான ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மல்வத்து மகா விகாரை இன்று (30) அறிவித்துள்ளது.மல்வத்து மகா விகாரைப் பிரிவின் கண்டி வலயத்தின் பிரதம சங்கநாயக்கரும் தற்போதைய அட்டமஸ்தானாதிபதியுமான பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்வத்து பிரிவின் செயலாளர் கலாநிதி பஹமுணே சுமங்கல நாயக்க தேரரின் கையொப்பத்துடன் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
