கொழும்பு நகரம் மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று (03) சனிக்கிழமை காலை 8 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரையிலான 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, தெஹிவளை-கல்கிஸை, கோட்டே, கடுவலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களுக்கு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது..
குறித்த பகுதிகளில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் 18 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
