மலையக புகையிரத மார்க்கத்தினூடாக வார இறுதியில் தற்போது முன்னெடுக்கப்படும் “எல்ல ஒடிஸி” (ELLA ODYSSEY) புகையிரத சேவைக்கு மேலதிகமாக 2 சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளின் பேரில், மேலதிகமாக 2 புகையிரத சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொதுமுகாமையாளர் டி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
