Our Feeds


Wednesday, September 14, 2022

SHAHNI RAMEES

கென்யாவின் 5ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் வில்லியம் ரூட்டோ..!

 

கிழக்கு ஆபிரிக்க குடியரசு நாடான கென்யாவின் ஐந்தாவது ஜனாதிபதியாக வில்லியம் ரூட்டோ பதவியேற்றார்.

ஜனாதிபதி தேர்தலில் 50.5 சதவீத வாக்குகளுடன் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாலும், அந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ரய்லா ஒடிங்கா கென்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கடந்த வாரம் அந்த மனுக்களை நிராகரித்ததைத் தொடர்ந்து, முன்னாள் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த வில்லியம் ரூட்டோ ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

கென்யாவின் ஜனாதிபதியாக இருந்து பதவி விலகும் உஹுரு மற்றும் துணை ஜனாதிபதியாக இருந்து ஜனாதிபதியாக பதவியேற்ற வில்லியம் ரூட்டோ ஆகிய இருவரும், பதவியேற்பு விழாவில் கை குலுக்கி பேசிக் கொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »