Our Feeds


Thursday, September 1, 2022

ShortTalk

"இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துங்கள்” ஐக்கிய நாடுகளுக்கு இலங்கை தமிழர்களின் கோரிக்கை!



தமிழ் தேசிய ஆறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு வரைபு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் முன்னெடுப்பில் இந்த வரைபு சாத்தியமாகியுள்ளது.

இந்த வரைபில் பிரதானமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு வலியுறுத்தப் பட்டுள்ளது.

தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி உள்ளமையால், மேலும் கால அவகாசங்கள் வழங்குவது அர்த்தமற்றது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையில் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதை தடுக்கும் என்ற வாதம் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இலங்கையை விட சீனாவுடன் மிக நெருக்கமாக இருந்த சூடான் நாட்டை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்திய பொழுது அதற்கு எதிராக எந்த நாடும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.

அதே போன்று வடகொரிய நாட்டை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் யோசனை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதையும் இந்த வரைபில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியக் குற்றங்களுக்காக நீண்டகாலமாக தமிழ் மக்கள் கோரி நிற்கும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு, இந்த உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபையை தூண்டுவதற்கான பிரேரணையை மனித உரிமை பேரவை நிறைவேற்ற வேண்டும் என இந்த வரைபில் கோரப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »