Our Feeds


Thursday, September 1, 2022

ShortTalk

திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு எரிசக்தி குழாய்! - மிலிந்த மொரகொட வெளியிட்ட புதிய தகவல்.



இலங்கை மண்ணோ அல்லது கடல் பிராந்தியமோ இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக பயன்படுத்தப்படுவதை இலங்கை அனுமதிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இதனை இன்று தெரிவித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையிடம் இந்த உறுதி மொழியை அளித்துள்ளதாக அவர் நேற்று புதுடில்லியில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவை 'தர்க்கரீதியான பங்காளி' என்று மொரகொட விபரித்தார்.

இதில் இடைக்கால நிதி மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் முதலீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகள் அடங்கும்.

கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் ஒவ்வொரு திருப்பத்திலும் இந்தியா உண்மையில் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது.

இந்தியா இல்லையென்றால் இலங்கை, கடுமையான பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும்.

எனவே இலங்கையர்கள் இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியா 3.8 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியது.

எனினும் இலங்கைக்கு கடினமான காலங்கள் இன்னும் முடிவடையவில்லை என்றும் மொரகொட குறிப்பிட்டார்.

இதேவேளை திருகோணமலை எண்ணெய் பண்ணைக்கும் இந்திய பக்கத்துக்கும் இடையே எரிசக்தி குழாய் அமைப்பது குறித்து இரு நாடுகளும் விவாதித்து வருவதாகவும் மொரகொட கூறினார்.

அண்மையில் சீன கப்பல் விடயத்தில் ஏற்பட்டதை போன்ற நிலையை தடுக்க இலங்ங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள அனைத்து விடயங்களில் 'தெளிவான உரையாடல்' தேவை என்பதை மொரகொட வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »