தமிழரும்,முஸ்லிம்களும் என்றும் ஒன்றாக ஒருமைப்பாடுடன் பயணிக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து பங்காற்றியவர் முன்னாள் அமைச்சர்.ஜனாதிபதி சட்டத்தரணி அமரர். அஷ்ரப் அவர்கள்…!
அவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் முஸ்லிம்கள் என்றும் ஒன்றுபட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருப்பார்.
அது மாத்திரமல்ல முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முகவரியாக திகழ்ந்தவர். அன்னாரின் 22வது ஆண்டு நினைவேந்தலை நினைவு கூறுவதில் நானும் பெருமிதம் அடைகிறேன்.
நான் அரசியல் தளத்திற்கு வருவதற்கு முன் அவரை நேரடியாக சந்திக்க விட்டாலும் அவரைப் பற்றி பல்வேறு வகையில் அறிந்திருக்கிறேன்.
துணிச்சலுடன் பல்வேறு சேவைகளை முஸ்லிம் சமூகத்திற்கு செய்தவர். அவருடைய சேவைகளை நான் கிழக்கு மாகாணத்துக்கு செல்கின்ற போது நேரடியாக கண்டிருக்கிறேன்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்ற ஒரு கல்வி கூடத்தை முழு மூச்சுடன் இருந்து உருவாக்கியவர்.
ஒலுவில் துறைமுகத்தை உருவாக்கியவர் இன்னும் எத்தனையோ சேவைகளை அடுக்கிக் கொண்டு கூறலாம் அமரர்.அஷ்ரப் அவர்களைப் பற்றி.
இறந்த பின்னும் இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒருவராக திகழ்கிறார் அமரர். அஷ்ரப் அவர்கள். அவர் முஸ்லீம் சமூகத்துக்கு செய்த பணிகள் மிக அளப்பரியது.
அன்னாரை போன்ற ஒருமைப்பாட்டை நேசிக்கும் சிறுபான்மை தலைவர்கள் இப்போது இல்லை என்னும் போதும் மனது கனக்கிறது.
ஆனாலும் அவர் மரணித்து எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவர் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வரலாறாக வாழ்கிறார்.
என தனது நினைவேந்தல் செய்தியில் தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி. வி.ஜனகன் அவர்கள் தெரிவித்தார்.
