Our Feeds


Tuesday, September 13, 2022

SHAHNI RAMEES

சிகிரியா கோட்டை அல்ல பூங்கா..! - ஆய்வுகள் உறுதி




சிகிரியா ஒரு கோட்டை அல்ல எனவும்,

அதனை பூங்காவாக பயன்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.


கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.


தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்,


“சிகிரியாவை சுற்றுலா மையம் என உலகமே அறியும். எனினும் சிகிரியா தொடர்பான சரியான தகவல்கள் உலகிற்கு செல்லவில்லை.


உலக புனித சுற்றுலா கலாசார மையம் என்று சீகிரியாவை பெயரிட்டாலும் அதற்கான முறையான அமைப்பு இல்லை. எனவே அதனை எப்படி செய்வது என்று விவாதிக்க வேண்டும்.



தொல்லியல் திணைக்களம் மற்றும் கலாச்சார மைய  அதிகாரிகள் அனைவரின் பங்குபற்றலுடன் சாதகமானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.


நாம் அனைவரும் சிகிரியாவை கோட்டை என நினைத்து சிகிரியாவிற்கு செல்கிறோம். சிகிரியா கோட்டை என்றால் ஏன் இவ்வளவு குளங்கள், அழகான மலர் தோட்டங்கள் இருக்கின்றன?


எனவே, சிகிரியா ஒரு கோட்டை அல்ல, அது ஒரு அழகான ஓய்வு பூங்கா. பேராதனை போலவே, இது அழகிற்காகவும், ஓய்வெடுக்கவும் கூடிய இடமாகும்.


பண்டைய காலத்தில் மன்னரால் கட்டப்பட்ட ஓய்வு பூங்காவாகும். இது தொடர்பான முழுமையான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.



இதேவேளை, இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலா அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »