Our Feeds


Friday, September 2, 2022

ShortNews

விமல் எம்.பியின் இல்லத்திற்கு தீ வைப்பு: சந்தேகநபர்கள் மூவர் கைது.



மே 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது ஹோகந்தரவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் இல்லத்தை தாக்கி தீ வைத்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று ஹோகந்தர பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 18, 36 மற்றும் 38 வயதுடைய ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »