Our Feeds


Friday, September 2, 2022

ShortNews

மஹாதீர் முகமட் அல்லது லீ குவான் யூ என நினைத்துக் கொண்டிருக்காமல் 60 வயதை தாண்டியவர்கள் அரசியலை விட்டு ஒதுங்குங்கள் - துமிந்த திசானாயக MP



நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மஹாதீர் முகமட் அல்லது லீ குவான் யூ போன்றவர்கள் என நினைத்து வேலை செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »