Our Feeds


Thursday, September 15, 2022

ShortNews

சீதுவை விஹாராதிபதி கொலை: தலைமறைவான பிக்கு துபாய் செல்ல முயற்சித்த நிலையில் கட்டுநாயகவில் கைது!



(நீர்கொழும்பு நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்)


சீதுவை நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் தலைமறைவானார் எனக் கூறப்படும் இளம் பிக்கு இன்று (15) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏக்கல சுகந்த ஸ்ரீ என்பவரே கைது செய்யப்பட்டுள்ள இளம் பிக்கு ஆவார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஈ.கே. 649 ஆம் இலக்க விமானத்தின் மூலமாக துபாய் செல்வதற்கு சந்தேக நபர் முயற்சித்த நிலையிலேயே  குடிவரவு குடியகல்வு திணைகள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அதிகாலை 4 மணி அளவில் சீதுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »