Our Feeds


Thursday, September 15, 2022

SHAHNI RAMEES

இன்று முதல் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் தாமரை கோபுரம்..!

 

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்.

10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஏனையவர்களுக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் அனுமதி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 300 மீற்றர் உயரம் கொண்ட இந்த தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப்பணிகள், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக சீன நிறுவனம் 88.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதுடன் மிகுதியை இலங்கை அரசாங்கம் கொடுத்துள்ளது.

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அண்மையில் அறிவித்ததுடன், 2024ஆம் ஆண்டுக்குள் கடன் தவணைக் கொடுப்பனவுகள் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »