தமது காரியாலயத்தில் பெண்ணொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான சம்பவம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளர் லக்ஷ்மன் திசாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லக்ஷ்மன் திசாநாயக்கவின் கலுகல்லயில் அமைந்துள்ள காரியாலயத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய 38 வயதான பெண்னொருவரின் சடலம், இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
கேகாலை - ஹபுதுகலை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்தப் பெண்ணின் வீட்டுக்கு, இன்று காலை சென்ற கேகாலை தொகுதி அமைப்பாளர், அவரை தமது காரியாலயத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் குறித்த பெண்ணின் சடலம் காரியாலத்திற்கு பின்னால் உள்ள அறை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை தொகுதி அமைப்பாளர் லக்ஷ்மன் திசாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
