ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பைத் திருத்துவதற்கு, கட்சியின் மத்திய குழு ஒருமனதாக அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம், கொழும்பு - டார்லி வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது.
யாப்பு திருத்தத்திற்கு அமைவான சில யோசனைகளில் திருத்தங்களை செய்வதற்கான இணக்கப்பாட்டின் அடிப்படையில், யாப்பு திருத்தத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருப்பினும், யாப்பு திருத்தத்தின் பின்னணியில், கட்சித் தலைவரின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கம் உள்ளதாக, சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.