Our Feeds


Tuesday, October 18, 2022

ShortTalk

இவ்வருடத்துடன் ஓய்வு பெற வேண்டிய வைத்தியர்களின் வயது ஒரு வருடத்தினால் நீடிப்பு...!

 

எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற வேண்டிய நிலையிலிருந்த, வைத்தியர்களின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தினால் நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.



தற்போது, 60, 61, 62 வயதான வைத்தியர்கள் முறையே 61, 62, 63 வயதுவரை சேவையில் நீடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

எனினும், தற்போது 59 வயதான வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »