முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷவுக்கு பிரதமர்
பதவி வழங்குவது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என வெகுஜன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (18) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் இருக்கும் பெசில் ராஜபக்க்ஷ நாடு திரும்பிய பின்னர் பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளனவா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அமைச்சரவையில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என தெரிவித்தார்.