Our Feeds


Sunday, November 27, 2022

ShortTalk

கல்லூரி மாணவர்களிடையே மோதல் – 11 பேர் காயம்.



காலி – அக்மீமன, ருஹுணு தேசிய கல்வியியற் கல்லூரியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த கல்வியியற் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்கள் குழுவினரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த கல்லூரியில் பயின்றவர்களும், தற்போது பயிற்சி ஆசிரியர்களாக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள குழுவினரும் திடீரென விடுதிக்கு வந்து தம்மை தாக்கியதாக காயமடைந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அக்மீமன காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »