Our Feeds


Tuesday, November 22, 2022

ShortTalk

இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக உயர்வு



இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 162 பேர் உயிரிழந்ததோடு,  நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். நிலநடுக்கத்திற்குப் பின்னர் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்தநிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கம் காரணமாக 162 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »