Our Feeds


Wednesday, November 9, 2022

News Editor

பொலிஸார் மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் ; சித்திரவதைகளை எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த தயாராக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது - அம்பிகா சற்குணநாதன்


 

பொலிஸார் எங்களை தாக்கினார்கள்.  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர். அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் .எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்  மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

ஆசிரியர்கள் மாணவர்களிற்கு உடல்ரீதியான தண்டனையை வழங்கிய பொலிஸார் மாணவர்களை தண்டித்த  மில்லனியாசம்பவம் இலங்கையில் அரச அதிகாரிகள் சிறுவர்களிற்கு வன்முறைகளை தயக்கமின்றி பயன்படுத்துவதை  வெளிப்படுத்தியுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இது புதிய விடயமல்ல,இது அமைப்பு ரீதியானது. தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் இவ்வாறான கலாச்சாரம்  தொடர்வதற்கு காரணமாக உள்ளது.

வன்முறைகளை இவ்வாறு மிகவும் சாதாரணமாக பயன்படுத்துவது சமூகத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக காணப்படுகின்றது.

எந்த வித தயக்கமும் இன்றி  உடனடியாக சித்திரவதைகளில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ள பொலிஸாருக்கு ஏனைய சூழ்நிலைகளில் வன்முறைகளை பயன்படுத்துவது கஸ்டமான விடயமாகயிருக்காது.

உதாரணத்திற்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வன்முறைகளை  அல்லது வீதியில் தவறான திசையில் வாகனத்தை செலுத்துபவர்களை தண்டிப்பது போன்றவை. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் எங்களை தாக்கினார்கள்  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர் அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்  மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட தொடங்கியது.

சித்திரவதை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் அடையாளங்கள் தெரியாமலிருப்பதற்காக கால்பாதத்தில் பட்டனால் அடித்துள்ளனர்- ஸ்கான் பண்ணுவதன் மூலம் மாத்திரமே ஏற்பட்ட காயங்களை கண்டுபிடிக்க முடியும்.

இவற்றை பொலிஸ் நிலையத்தில் வைத்து செய்யவில்லை பொலிஸ் ஜீப்பில் கொண்டு செல்கையில் இதனை தெரிவித்துள்ளனர் - வழமையான தந்திரோபாயம்.

பொலிஸார் ஆபாசமான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்,இங்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து சித்திரவதைகளும் பெரியவர்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுபவை.

10 வயது மாணவர்கள் மீது  இந்த சித்திரவதைகளை பொலிஸார் பயன்படுத்தியமை மிருகத்தனம்  சமூகத்தில் ஆழமாக்கப்படுவதையும்,உளவியல் சமூக தலையீடுகள் அவசியம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »