Our Feeds


Monday, November 21, 2022

News Editor

பிறப்பு சான்றிதழில் தேசிய இனத்தை நீக்க நடவடிக்கை


 

பிறப்பு சான்றிதழில் தேசிய இனம் என்பதை நீக்குவது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதிவாளர் நாயகம் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

பிறப்பு சான்றிதழில் தற்போது காணப்படும் சிங்களவர் தமிழர் பேகர் முஸ்லீம் இந்திய வம்சாவளியினர் போன்ற பதங்கள் நீக்கப்படும் என பதிவாளர் நாயகம்; பிரசாத் அபேய்விக்கிரம தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் தற்போது காணப்படும் விவகாரங்கள் மற்றும் சர்வதேச அளவில் காணப்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் அதேவேளை  தேசிய இனம் என்பதை அகற்றுவதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரத்திற்கு ஏற்ப பிறப்பு சான்றிதழில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் பிறப்பு சான்றிதழை ஒருவர் தனது தாய்மொழியிலேயே பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் இலங்கையில் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் வெளிநாட்டிற்கு செல்லும்போது பிறப்பு சான்றிதழை மொழிபெயர்க்கவேண்டிய தேவையில்லை,என தெரிவித்துள்ள பதிவாளர் நாயகம் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன தேசிய அடையாள அட்டையை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரும்பினால் தேசிய இனம் என்பதை இணைத்துக்கொள்ள முடியும், எனினும் தந்தை தாயின் திருமண நிலை காணப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »