Our Feeds


Thursday, November 17, 2022

ShortNews

ஈஸ்டர் தாக்குதல் - பொலிஸாருக்கு தகவல் வழங்காமை குறித்த பயங்கரவாத தடைச் சட்ட வழக்கு : முஹம்மத் சமீரை நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தரவு.


 

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய தகவல்களை அறிந்திருந்தும் அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில்,  பிரதிவாதியை எதிர்வரும் திங்களன்று நீதிமன்றில் ஆஜர்செய்ய வேண்டும் என நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.

மொஹம்மட் சமீர் எனும் நபருக்கு எதிராக  பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் நுவரெலியா மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இது குறித்த வழக்கு இன்று (17) விசாரணைக்கு வந்த போதும், பிரதிவாதியை நீதிமன்ரில் ஆஜர் செய்ய சிறைச்சாலைகள் அதிகாரிகள் தவறியிருந்தனர்.

அத்துடன் சட்ட மா அதிபர் சார்பிலான பிரசன்னமும் இருக்கவில்லை.  பிரதிவாதிக்காக சட்டத்தரணி இம்தியாஸ் வஹாபுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பிரசன்னமாகியிருந்தார்.

இந் நிலையிலேயே பிரதிவாதியை எதிர்வரும் திங்களன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என நுவரெலியா  மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.


நன்றி: வீரகேசரி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »