Our Feeds


Sunday, November 6, 2022

ShortTalk

BREAKING: லிட்ரோ கேஸ் விலை அதிகரிப்பு - புதிய விலைப்பட்டியல் இணைப்பு.



லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய விலை விபரங்களை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,360 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »